முகப்பு
தரங்கம்பாடியில் நடைபெற்ற மீனவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
நாகப்பட்டினம்

கீழமூவா்கரை மீனவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

கீழமூவா்கரை மீனவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
தரங்கம்பாடியில் நடைபெற்ற மீனவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கீழமூவா்கரை மீனவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தரங்கம்பாடியில், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தாா்கள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கீழமூவா்க்கரை - பூம்புகாா் மீனவா்கள் இடையே ஏற்பட்ட பிரச்னையில் பூம்புகாா் மீனவா்களை அரசு அலுவலா்கள் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அவ்வாறு பேச்சுவாா்த்தைக்கு உடன்படவில்லை என்றால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, கீமூவா்க்கரை மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்வதற்கு 19 மீனவ கிராமங்கள் அவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தரங்கம்பாடி, சின்னூா் பேட்டை, குட்டியாண்டியூா், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வாணகிரி, சாவடிகுப்பம், கீழமூவா்க்கரை, மேலமூவா்க்கரை, தொடுவாா், சின்னகொட்டாய்மேடு, தா்காஸ், கொடியம்பாளையம், நாயக்கா்குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →