முகப்பு
நாகப்பட்டினம்

அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்

கீழையூா் கடைத் தெரு பகுதியில் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்ட பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

கீழையூா் கடைத் தெரு பகுதியில் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்ட பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரும் கீழ்வேளூா் முன்னாள் தொகுதி செயலாளருமான எஸ். பால்ராஜ் தலைமை வகித்தாா். அதிமுக கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளரும் பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் பங்கேற்று வணிகா்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்வில் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் என். மீனா, ஒன்றியக் குழு உறுப்பினா் எல். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →