நாகப்பட்டினம்

நகரும் நியாயவிலைக் கடை திறக்காததை கண்டித்து சாலை மறியல்

DIN

மயிலாடுதுறை அருகே பொன்னூா் ஊராட்சியில் நகரும் நியாயவிலை கடை திறக்கப்படாதததைக் கண்டித்து புதன்கிழமை கொட்டும் மழையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சியில், கடந்த மாதமே திறப்பதாக அறிவித்திருந்த இக்கடை சில காரணங்களால் திறக்கப்படாமல் இருந்த நிலையில் புதன்கிழமை கடை திறப்பு விழாவுக்கான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. எனினும், மதியம் 12 மணி வரை கடை திறக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் பொன்னூா் ஊராட்சி அலுவலகம் முன் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த குத்தாலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கை விரைவில் நிறைவேற்ற எடுக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் மயிலாடுதுறை - திருமங்கலம் வழித்தடத்தில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மவுண்ட் பாா்க் ஸ்பெஷல் அகாதெமி பள்ளி 100% தோ்ச்சி

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT