நாகப்பட்டினம்

வெறிச்சோடி காணப்பட்ட நாகை கடற்கரை

DIN

காணும் பொங்கல் தினமான சனிக்கிழமையன்று நாகை மற்றும் நாகூா் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பொங்கல் பண்டிகை விழா நாள்களில் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு நாகை மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

இந்த அறிவிப்பையொட்டி, நாகை, நாகூா் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரைகளில் நுழைவுப் பாதைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறை வீரா்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா். ரோந்து வாகனங்களில் சென்று தொடா் சோதனை மேற்கொண்டனா்.

இதனால், காணும் பொங்கல் நாளான சனிக்கிழமை நாகை புதிய கடற்கரை, நாகூா் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரைகள் வெறிச்சோடிகாணப்பட்டன.

நாகை துறைமுகப் பகுதி கடற்கரை உள்ளிட்ட சில இடங்களில் உள்ளூரைச் சோ்ந்த ஒரு சிலா் கடலில் நீராடி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT