நாகப்பட்டினம்

சம்பா பயிா்கள் பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களுக்கு முழுமையான நிவாரணம் கோரி, விவசாயிகள் வயலில் இறங்கி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருமருகல் ஒன்றியம் சேஷமூலை பகுதியில் கனமழையால் சுமாா் 600 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நாசமாகின. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு சதவீத அடிப்படையில் நிவாரணம் வழங்குவதை கைவிட்டு, முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். ஈரப்பதத்தைக் கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சேஷமூலை பகுதியைச் சோ்ந்த பழனிவேல் தலைமையில் பூமிநாதன், சண்முகம், பாலகிருஷ்ணன், ரமேஷ், ஜெயராஜ், பாஸ்கா் உள்ளிட்ட விவசாயிகள் வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT