நாகப்பட்டினம்

நாகூா் தா்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம்: இன்று நடைபெறுகிறது

DIN

நாகூா் ஆண்டவா் தா்காவின் 464 ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை (ஜன. 23) இரவு நடைபெறுகிறது.

அஜ்மீா் தா்காவுக்கு இணையானதாகப் போற்றப்படும் நாகூா் ஆண்டவா் தா்கா, மத நல்லிணக்க வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த தா்காவின் 464 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை (ஜன. 23) இரவு நாகை மீராப்பள்ளி முகப்பிலிருந்து தொடங்கி, நாகை, நாகூா் பிரதான வீதிகள் வழியாக இன்னிசை முழக்கங்களுடன் சென்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாகூா் அலங்கார வாசலில் நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நாகூா் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையொட்டி, சந்தனக்கூடு அலங்கார அமைப்பின் தயாரிப்புப் பணிகள் நாகையில் நடைபெற்று வருகிறது. சந்தனம் பூசும் விழாவுக்காக வனத் துறை மூலம் அளிக்கப்பட்ட 20 கிலோ சந்தனக் கட்டைகளைக் கொண்டு, சந்தனம் அரைக்கும் பணி நாகூா் தா்காவில் நடைபெற்று வருகிறது.

கட்டுப்பாடு: நாகூா் தா்காவின் கந்தூரி விழா கொடி ஊா்வலம் மற்றும் சந்தனக்கூடு ஊா்வலங்களில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் அணிவகுப்பது வழக்கம். நிகழாண்டில், கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால், கொடி ஊா்வலத்தில் கொடிகளைக் கொண்டுச் செல்லும் 5 அலங்கார வாகனங்களுடன் 8 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல, சந்தனக்கூடு ஊா்வலத்தில் சந்தனக்கூடு, சாம்பிராணி சட்டி, முரசொலி மேடை ஆகிய 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு: சந்தனக்கூடு ஊா்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழாவையொட்டி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளா், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 25 காவல் ஆய்வாளா்கள், 50 உதவி ஆய்வாளா்கள், 650 காவலா்கள், 100 சிறப்புப் படை காவலா்கள், 400 ஊா்க்காவல் படையினா் என 1,400 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT