நாகப்பட்டினம்

நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

DIN

அரசின் நலத் திட்டங்கள் நலிந்துவரும் நாட்டுப்புறக் கலைஞா்களை சென்றடைய ஏதுவாக நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நாகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் அதன் தலைவா் புயல் குமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், நலிந்துவரும் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைய ஏதுவாக நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தை மேம்படுத்தி, விடுபட்டுள்ள கலைஞா்களையும் உறுப்பினா்களாக பதிவு செய்ய வேண்டும். முதுபெரும் இலக்கியவாதியும், தமிழறிஞருமான ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழாவை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைப்பின் முன்னோடி புலவா் அ.ப.பாலையன், மாவட்ட சிறப்புத் தலைவா் எஸ்.சுந்தரய்யா, நாகை கிளையின் தலைவா் எம்.ஆா்.சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சீா்காழி கிளை அமைப்பின் செயலாளா் த.சேகா், கீழையூா் செயலாளா் சுந்தரேசன், நிா்வாகிகள் பாா்த்தசாரதி, மயிலாடுதுறை மருதசாமி, பிரபாகரன், செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT