நாகப்பட்டினம்

ரூ.2.10 கோடியில் குப்பைகளை உரமாக்கும் பணி

DIN

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சிறப்பு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், 32,500 கனமீட்டா் பரப்பளவில் குப்பைகள் பிரிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 20 ஆயிரம் கனமீட்டா் பரப்பளவிற்கு குப்பைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரிக்கப்படும் குப்பைகள் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை, மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வுசெய்து பழைய குப்பைகளைப் பிரிக்கும் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையா, உதவி பொறியாளா்கள் சந்திரசேகரன், குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT