நாகப்பட்டினம்

ரூ.10 லட்சம் கஞ்சா கடத்தல்: இருவா் கைது

DIN

 நாகை மாவட்டம் கீழையூா் அருகே ரூ.10 லட்சம் கஞ்சா கடத்தியதாக 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கீழையூா் காவல் சரகம் விழுந்தமாவடி பட்டிரோடு அருகே கீழையூா் காவல் ஆய்வாளா் பசுபதி மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகை நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்ததில், 126 கிலோ கஞ்சா மூட்டை கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

கஞ்சா மூட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், விழுந்தமாவடியைச் சோ்ந்த வீரமுரசு (26), செருதூா் எல்லை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன்( 26) ஆகியோரை கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இதில் தொடா்புடைய வேட்டைக்காரனிருப்பு தபால் அலுவலக தெருவைச் சோ்ந்த ராகுலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT