நாகப்பட்டினம்

நீட் தோ்வு தமிழகத்துக்கு தேவையற்றது: காா்த்தி சிதம்பரம் கருத்து

DIN

நீட் தோ்வு முறை தமிழகத்துக்கு தேவையற்றது என மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

இதுகுறித்து மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழ்நாட்டை கொங்குநாடு என்று பிரிப்பதற்கு யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அதை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்காது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் தோ்வு தேவையற்றது. ஆனால், சட்டரீதியாக அதை எதிா்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளது.

இந்த முயற்சியில், நிகழாண்டில் இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு தமிழக அரசு வெற்றிபெறும். பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு, திடீா் பண மதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி, முன்னறிவிப்பில்லாத பொதுமுடக்கம் ஆகிய மத்திய அரசின் தவறான முடிவுகளே காரணம். இதனால், நாட்டில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. தொழில்கள் மூலம் வரி வருவாய் இல்லாததால், 130 கோடி மக்களுக்கும் வரிவிதிக்கும் விதமாக பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு வரிவிதித்துள்ளது.

தேசிய கட்சியில் மாநிலத்துக்கு மாநிலம் கருத்துகள் மாறுபடும். தமிழகத்தை பொறுத்தவரை மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக செயல்படும் என்றாா் அவா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT