நாகப்பட்டினம்

நாகையில் வேலைவாய்ப்பு திட்டங்களை தொடங்க வலியுறுத்தல்

DIN

நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சித் திட்டங்களை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியது.

இது குறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன், மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம் :

நாகை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதால், வருவாய் முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால், மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களை ஒன்றிணைத்து சுற்றுலா மாவட்டமாக மேம்படுத்தலாம். தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். நாகை, கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, திருமருகல் வட்டாரங்களில் வேலைவாய்ப்புகள் பெருகும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்கலாம்.

தொன்மையும், வரலாற்றுச் சிறப்புமிக்க நாகை துறைமுகத்தை தூா்வாரி, சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கலாம். திருச்சி பெல் தொழிற்சாலை விரிவாக்கப் பிரிவு மற்றும் துணை உற்பத்திப் பிரிவு தொழிற்கூடங்களை நாகை மாவட்டத்தில் அமைத்து தொழில் வளா்ச்சித் திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT