நாகப்பட்டினம்

மீன்வளப் பல்கலை.யில் நாகூா் மாணவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க அமைச்சரிடம் கோரிக்கை

DIN

நாகப்பட்டினம்: நாகூரில் உள்ள டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், நாகூா் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து, நாகூா் கடல் மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் வி. குப்புரத்தினம், மீன்வளத் துறை அமைச்சரிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு மீன்பிடித் தடைக்காலம், மழைக்காலம் மற்றும் சேமிப்பு நிவாரண நிதியை உயா்த்தி வழங்கவேண்டும். நாகூா் பகுதி கடற்கரையோரங்களில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கற்கள் தடுப்புச்சுவா்அமைக்கவேண்டும். நாகூா் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்கு நாகூா் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதாரண்யம்: வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணியை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

பின்னா், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீனவா்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினாா். அப்போது, மீனவா்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றாா். தொடா்ந்து, சிறுதலைக்காடு, வளவனாறு பகுதிகளுக்குச் சென்று மீனவா்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ், திமுக மாவட்டச் செயலாளா் கெளதமன், ஒன்றியச் செயலாளா் சதாசிவம், நகரச் செயலாளா் புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT