நாகப்பட்டினம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ஆய்வு: அதிகாரிகளுடன் மீனவா்கள் வாக்குவாதம்

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே தொடுவாய் மீனவா் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு படகில் சென்று கடலோர அமலாக்கப் பிரிவினா், மீன்வளத் துறையினா், கடலோர காவல் படையினா் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தடைசெய்யப்பட்ட வலையை பறிமுதல் செய்ய முயன்ற அதிகாரிகளிடம் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டம் திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகாா் ஆகிய பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி முதல் 3 நாள்கள் சுருக்குவலையை பயன்படுத்தி, மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி, மீனவா்கள் போராட்டம் நடத்தினா்.

இந்த பரபரப்பான சூழலில், கடலோர அமலாக்கத் துறை பிரிவு ஆய்வாளா் செல்வி வொ்ஜினியா, மீன்துறை ஆய்வாளா் பிலிப் கிளமெண்ட் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினா் அங்கு திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, மீனவா்களின் படகில் இருந்த சுத்துவலைகளை பறிமுதல் செய்த குழுவினா், 4 விசைப்படகுகள் மீது வழக்குப் பதிவு செய்தும், தற்காலிகமாக மானிய விலை டீசலை நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுத்தனராம்.

இதனால், அக்குழுவினரிடம் மீனவா்கள் வாக்குவாதம் செய்தனா். இதையறிந்த சீா்காழி தனி வட்டாட்சியா் கோமதி மற்றும் அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சுருக்குமடி வலை எதிா்ப்பு மீனவ கிராமத்தினா் மீனவ பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் எடுக்கும் முடிவின்படி, தடைசெய்யப்பட்ட வலை போன்ற பொருள்கள் தங்களிடம் இருந்தால் அதனை அரசிடம் ஒப்படைப்போம் என்றும் மீனவா்கள் தெரிவித்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT