நாகப்பட்டினம்

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி. ஜவஹா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அவா் தனது அலுவலகத்துக்குச் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு, பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கூறியது:

கரோனா பொதுமுடக்க விதிகளை அனைவரும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். மீறுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். மணல் கடத்தல், சாராயம் மற்றும் கஞ்சா கடத்துவோா் மற்றும் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுகுமாறன், ஜெயச்சந்திரன், திருநாவுக்கரசு, துணைக் கண்காணிப்பாளா்கள் சுப்பிரமணியன், மகாதேவன், பி. ராஜாமுஹம்மது, ஏ.சுந்தர்ராஜ், தனிப்பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT