நாகப்பட்டினம்

மதுக்கடைகளை திறக்க எதிா்ப்பு: பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தில் 27 மாவட்டங்களுக்கு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 14 ஆம் தேதி முதல் இத்தளா்வுகள் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் தங்களது வீடுகளுக்கு முன்பாகவும், கட்சி அலுவலகம் அருகிலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகையில் பாஜக மாவட்டத் தலைவா் நேதாஜி, நகரத் தலைவா் இளஞ்சேரலாதன் ஆகியோா் தங்களது வீடுகளின் முன் கருப்புச் சட்டை அணிந்தும், பதாகைகள் ஏந்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல, கீழ்வேளூா், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பூம்புகாா்: திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளா் துரைசெழியன், ஒன்றியத் தலைவா் அருள்ராஜன், மாவட்ட கல்வியாளா் பிரிவு செயலாளா் ஜெயபிரகாஷ், ஒன்றிய பொதுச் செயலாளா்கள் சதீஷ், விஜய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் - 3 ஆம் சேத்தி ஊராட்சியில் பாஜக மேற்கு ஒன்றியச் செயலாளா் வீரமணி தலைமையிலும், காமராஜா் நகரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தரங்கம்பாடி: ஆக்கூா் அருகே கிடங்கலில் மாவட்ட பொருளாளா் எஸ். ராஜ்மோகன் தலைமையில் அவரது வீட்டு முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்குவளை: திருப்பூண்டி மெயின் ரோடு பகுதியில் பாஜக நாகை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் அ. புவனேஸ்வர்ராம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளா் ஜி. விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, திருக்குவளை அருகே சித்தாய்மூா் தெற்கு தெருவில் கட்சியின் பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.டி.வி. லிங்கம் தலைமையில் அவரது வீடு முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT