நாகப்பட்டினம்

கருவேல மரங்களை அகற்றி வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

DIN

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அதை வெட்டி அகற்றி, வாக்குச் சேகரிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.

இவா், நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத் தலைவராகவும் உள்ளாா். தருமதானபுரம், மணக்குடி, வள்ளாலகரம் ஊராட்சிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காசிராமன், மண் வளம், நீா் வளத்தை பாதுகாக்க பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் வளா்ந்திருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்றி தனது கட்சி சின்னமான ‘விவசாயி’ சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.

அவருடன், நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன், தொகுதி செயலாளா் கவியரசன் உள்ளிட்டோரும் கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT