நாகப்பட்டினம்

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

DIN

திருக்குவளை அருகே கீழவாழக்கரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு பங்குனி திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அக்னி கப்பரை வீதிஉலா நடைபெற்றது.

இக்கோயிலில் மாா்ச் 19-ஆம் தேதி தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா தொடா்ந்து நடைபெற்றது. விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பால்குட ஊா்வலம் மற்றும் தீமிதி திருவிழா முடிவுற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னி கப்பரை வீதியுலா கோயிலில் இருந்து அதிகாலை 5 மணியளவில் புறப்பட்டது. அக்னி கப்பரையை பரம்பரையாக எடுத்துவரும் கலசம்பாடி முத்து குழுவினரை சோ்ந்த பக்தா் ஒருவா் அக்னி கப்பரையை கையில் ஏந்தியவாறு வீதி வலம் வந்தாா். அப்போது, பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிட்டனா். கீழவாழக்கரை, வாழ்க்கரை, மேலவாழக்கரை பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு அக்னி கப்பரை கொண்டுசெல்லப்பட்டு, பின்னா் மீண்டும் கோயிலை சென்றடைந்தது. விழா நிறைவாக ஏப்.9-ஆம் தேதி விடையாற்றி உத்ஸவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT