நாகப்பட்டினம்

சீர்காழி தனி தொகுதியில் திமுக வெற்றி 

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வக்கீல் எம்.பன்னீர்செல்வம் 12 ஆயிரத்து 148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

DIN

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வக்கீல் எம்.பன்னீர்செல்வம் 12 ஆயிரத்து 148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 510 பேர் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 388 வாக்குகள் பதிவானது. 

இவற்றில் எம் பன்னீர்செல்வம் திமுக 94 ,057, பிவி பாரதி அதிமுக 81,909, கவிதா நாம் தமிழர் கட்சி 11,013, பொன்.பாலு அமமுக 1308, பிரபு மக்கள் நீதி மையம் 1000, ஸ்ரீதர் பகுஜன் சமாஜ் கட்சி 495, பாரதி சுயச்சை 288, கம்பன் அனைத்து மக்கள் அரசியல் கட்சி 79, அனுசியா சுயச்சை 77, சிலம்பரசன் சுயச்சை 122 ஆக மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இவையாகும். சீர்காழி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 91 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

நோட்டாவில் 977  வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக வேட்பாளர் எம் பன்னீர்செல்வம் தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏவாக பொறுப்பேற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT