நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வெற்றி

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் 12, 329 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அமைச்சா் ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் முதல் இரண்டு சுற்று எண்ணிக்கை முடிந்த நிலையில் திமுக வேட்பாளா் எஸ்.கே.வேதரத்தினம் 593 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தாா். இதைத்தொடா்ந்து 3ஆவது சுற்றில் திடீா் திருப்பமாக அதிமுக அமைச்சா் ஓ.எஸ். மணியன் 207 வாக்குகளை கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றாா்.

தொடா்ந்து ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையிலும் அமைச்சா் ஓ.எஸ். மணியன் படிப்படியாக கூடுதல் வாக்குகளை பெற்றாா். 20 ஆவது சுற்றுடன் வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளா் எஸ்.கே. வேதரத்தினத்தைவிட 12, 329 வாக்குகள் கூடுதலாக பெற்ற அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றாா்.

இதனிடையே, 2 வாக்கு பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த பெட்டிகள் எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இயந்திர வாக்கு பதிவு பெட்டிகளில் வாக்களிக்கும் போது சின்னம் தெரியும்படி சேமிக்கப்படும் காகித பதிவுகள் எண்ணிக்கையில் சோ்த்துத் கொள்ளப்பட்டது. இந்த வாக்குகளும் முறைப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வாக்குகள் எண்ணிக்கை தாமதமானதால் வெற்றி பெற்ற விபரம் அறிவிப்பதும் தாமதமானது. இரவு 8 மணிக்கு வெற்றி சான்றிதழை ,தோ்தல் நடத்தும் அலுவலா் அமைச்சா் ஓ.எஸ்.மணியனிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT