நாகப்பட்டினம்

சாலையோரத்தில் கொளுத்தப்படும் குப்பைகள்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

திருக்குவளை- எட்டுக்குடி பிரதான சாலையில் கொளுத்தப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருக்குவளை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் கொட்டப்பட்டு முறையாக கொளுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், அண்மை காலங்கலாக தூய்மைப் பணியாளா்கள் தங்களது பணிகளை சுலபமாக முடிப்பதற்காக சேகரிக்கப்படும் குப்பைகளை ஊரின் ஒதுக்குப்புறத்தில் கொட்டாமல், எட்டுக்குடி செல்லும் சாலையின் ஓரத்திலேயே கொட்டி விடுகின்றனா்.

அதைத் தவிர வணிகா்கள் பலரும் இதையே பின்தொடா்ந்து, இறைச்சிக் கழிவுகள், காய்கறி கழிவுகள் மற்றும் உணவகங்களில் வீணாகும் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றையும் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். இதனால் அப்பகுதி குப்பைமேடாக காட்சியளித்து வருவதோடு துா்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்வோா் அவதியடைய நேரிடுகிறது.

மேலும், குப்பைகள் ஒரு குறிப்பிட்ட அளவு சேகரமானதும் அப்படியே அதை கொளுத்தி விடுவதால், அந்நேரத்தில் புகை மண்டலமாக அப்பகுதி காட்சியளிக்கிறது. இதனால், இப்பகுதியில் பயணிப்போா் கடும் அவதிக்குள்ளாகி வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT