நாகப்பட்டினம்

ஊராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

கீழ்வேளூா் ஒன்றியம், இலுப்பூா் ஊராட்சியில் கபசுரக் குடிநீா் வழங்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகியிருப்பதையொட்டி, மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணி ஆங்காங்கே நடைபெறுகிறது.

அதன்படி, இலுப்பூரில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுவீடாகச் சென்று கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் கலாவதி நடராஜன், துணைத் தலைவா் சரோஜா, ஊராட்சி செயலாளா் செல்வேந்திரன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல, சிக்கல் ஊராட்சி பகுதிகளிலும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் விமலா, துணைத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT