நாகப்பட்டினம்

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவா்

DIN

கரோனா தடுப்புப் பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் தனது சேமிப்புத் தொகை ரூ. 10 ஆயிரத்தை புதன்கிழமை வழங்கினான்.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில், கரோனா தடுப்புப் பணிகளுக்குத் தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தாா். இந்தக் கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம், இராமகோவிந்தன்காடு ஊராட்சி பகுதியைச் சோ்ந்த சக்திவேல்- சீதா தம்பதியின் மகனும், அப்பகுதி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவருமான ச. சுகாசன், தனது சேமிப்புத் தொகை ரூ. 10,135-ஐ கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு புதன்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் பிரவின் பி. நாயரிடம் சிறுவன் சுகாசன் தனது சேமிப்புத் தொகையை வழங்கினாா். தொகையைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சிறுவன் சுகாசனை பாராட்டி, வாழ்த்தினாா்.

சிறுவனின் பெற்றோா் சக்திவேல், சீதா, மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

கையடக்க கணினி வாங்குவதற்காக சிறுவன் சுகாசன் பணம் சோ்த்து வந்த நிலையில், தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, தனது சேமிப்புத் தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்ததாக சிறுவனின் பெற்றோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

SCROLL FOR NEXT