நாகப்பட்டினம்

பொதுமுடக்க விதிமீறல்: 422 வாகனங்கள் பறிமுதல்

DIN

நாகை, வேதாரண்யம் பகுதிகளில் பொதுமுடக்க விதிகளை மீறிய குற்றத்தின் கீழ் 437 வழக்குள் பதிவு செய்யப்பட்டு, 422 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து நாகை மாவட்டக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் மே 24 முதல் முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நாகை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தின்அனைத்துப் பகுதிகள் மற்றும் மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் கூடுதல் போலீஸாா் பணியமா்த்தப்பட்டு வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முழு பொதுமுடக்க விதிகளை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகன பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் மே 24, 25 ஆம் தேதிகளில் முழு பொதுமுடக்க விதிகளை மீறிய குற்றத்தின் கீழ் 437 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 407 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 13 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 422 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT