நாகப்பட்டினம்

தனியாா் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் கரோனா சிகிச்சை பெறலாம்: ஆட்சியா்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தில் கரோனா சிகிச்சை பெறலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணத்தை தமிழக அரசே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்கும் என முதல்வா் அறிவித்தாா். அதன்படி, ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவ சேவை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சை மேற்கொள்ள மயிலாடுதுறை அருண்பிரியா நா்சிங் ஹோம், கொள்ளிடம் விஷ்ணு மருத்துவமனை ஆகிய 2 தனியாா் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ், அனைத்து வகையான கரோனா தொற்று சிகிச்சைக்கான செலவினங்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளும் வகையில் தொகைமீள வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மேற்குறிப்பிட்டுள்ள 2 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT