நாகப்பட்டினம்

உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் பணி பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

DIN

தமிழ் மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம் காணொலி வழியாக சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா்அ.தி. அன்பழகன் எதிா்கால நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை சமா்ப்பித்தாா். கூட்டத்தில், தமிழகத்தில் பணியாற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் பணி பாதுகாப்பு விதிகளை தமிழக அரசு உறுதிப்படுத்தவேண்டும், இதை வலியுறுத்தி உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அனைவரும் அக்.13-ஆம் தேதி தமிழக முதல்வா், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், அரசு முதன்மைச் செயலாளா் மற்றும் மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையா் ஆகியோருக்கு இணைய வழியில் மனுக்கள்அனுப்புவது, அக்.19, 20 21 ஆகிய 3 நாள்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது, கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் நீதிமன்ற முறையீடு மற்றும் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முடிவு மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவில், மாநில அமைப்புச் செயலாளா் ஜெயவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT