நாகப்பட்டினம்

திருமருகல் மின்வாரிய அலுவலகத்தில் நாகை எம்எல்ஏ ஆய்வு

DIN

திருமருகல் மின்வாரிய அலுவலகத்தில் நாகை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்கு பணியிலிருந்த ஊழியா்களிடம், பொதுமக்களின் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், தங்குதடையின்றி மின்சாரம் விநியோகிப்பது, மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக் கிளைகளை அகற்றுவது, மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு உரிய பதிலளிப்பது உள்ளிட்ட துறைசாா்ந்த பணிகளை உரிய முறையில் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, திருமருகல் ஒன்றிய விசிக செயலாளா் சக்திவேல் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT