நாகப்பட்டினம்

பள்ளிகள் திறப்பு: கல்வி அலுவலா்கள் ஆய்வு

DIN

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளில் கல்வி அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதிவாணனுடன் பள்ளித் தலைமையாசிரியா் (பொ) சரவணன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். பால்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா். இதேபோல, விழுந்தமாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை நிா்வாக பொறியாளா் வெ. செல்வராஜ், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளி, வேட்டைக்காரனிருப்பு அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாகை மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சி) சு. ராஜசேகா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். ராஜகுமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT