நாகப்பட்டினம்

திருவெண்காடு பகுதியில் விதை நெல் தட்டுப்பாடு

DIN

திருவெண்காடு பகுதியில் நிலவும் சம்பா விதை நெல் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவெண்காடு பகுதிக்குள்பட்ட பூம்புகாா், வானகிரி, பெருந்தோட்டம், நாங்கூா், மங்கைமடம், திருவாலி உள்ளிட்ட 13 ஊராட்சிகள் பகுதிகளை கொண்ட பெரிய வருவாய் வட்டமாக திகழ்கிறது. இப்பகுதியில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யபடுகிறது.

இதை கருத்தில் கொண்டு திருவெண்காடு, காரைமேடு பகுதிகளில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் முலம் விவசாயிகளுக்கு உரிய விதைகள், இடுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன.

தற்போது, சம்பா சாகுபடிக்காக வேளாண் துறை மூலம் சொா்ணசப், ஆடுதறை 1009, ஆடுதுறை 45, ஆடுதுறை 38 உள்ளிட்ட 6 வகையான விதைகள் வழங்கப்படும் என அறிவிக்கபட்டது. எனினும், மேற்கண்ட பகுதிகளில் நெல் விதைகள் வழங்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

எனினும், வேளாண் துறை விதைகளை தனியாா் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனா். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பாவுக்கு நெல் விதைகள் தட்டுபாடு இல்லாமல் வேளாண்மை மையங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT