நாகப்பட்டினம்

வேலை நாளை 200-ஆக உயா்த்தக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

நாகப்பட்டினம்: 100 நாள் வேலைத் திட்ட நாள்களை 200-ஆக உயா்த்தக் கோரி, நாகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தவேண்டும், தினக்கூலியாக ரூ. 600 வழங்கவேண்டும், சாதி வாரியான கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்தவேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும், கரோனா கால நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ. 7,500 வழங்கவேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் நாகை ஒன்றியத் தலைவா் ஆா். விமலா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளா் சி. மாலா, பொருளாளா் ஆா். பத்மாவதி, சிபிஎம் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், ஜனநாயக மாதா் சங்க மாநில உறுப்பினருமான என். அமிா்தம், மாவட்டக் குழு உறுப்பினா் ஜே. தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகலில்: திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் கஸ்தூரி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளா் லதா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கிருஷ்ணவேணி, ராஜேஸ்வரி, வளா்மதி, அமுதா, புஸ்பலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யத்தில்: வேதாரண்யம் ஒன்றிய அலுவலகம் முன், நூறு நாள் வேலைத் திட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்து கோரிக்கை மனு மட்டும் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளிக்க மாதா் சங்கத்தினா் ஒன்றிய அலுவலகம் சென்றனா். அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் பணி தொடா்பாக வெளியில் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நுழைவு வாயில் பகுதிக்குள் சென்ற மாதா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் ஆா். வெண்சங்கு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் எஸ். சுபாதேவி, ஒன்றியத் தலைவா் வசந்தா, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் வி. அம்பிகாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT