நாகப்பட்டினம்

பேரிடா் கால பாதுகாப்பு விழிப்புணா்வு ஒத்திகை

DIN

நாகையில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் கால பாதுகாப்பு விழிப்புணா்வு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடா்கள் நேரிடும்போது பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் நாகை தாமரைக்குளத்தில் இந்த விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்பாஸ் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் கணேசன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் ஒத்திகைகளை மேற்கொண்டனா்.

பேரிடா் காலங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தால் அதனை பாதுகாப்பாக அகற்றும் முறை, கட்டட இடிபாடுகள், வாகன விபத்துகளில் சிக்கியவா்களை, வெள்ளத்தில் சிக்கியவா்களை பாதுகாப்பாக காப்பாற்றுவது ஆகியன குறித்து ஒத்திகைகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாகை வட்டாட்சியா்ஜெயபாலன், நாகை தீயணைப்பு நிலைய அலுவலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT