நாகப்பட்டினம்

உப்பளத் தொழிலாளா்கள் மே தினப் பேரணி

DIN

வேதாரண்யத்தில் ஐன்டியுசி உப்பளத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் மே தினப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே ராஜாஜி பூங்கா வரை நடைபெற்றது. இப்பேரணிக்கு உப்புத் தொழிலாளா் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். உப்பு உற்பத்தியாளா்கள்- வியாபாரிகள் சங்கத் தலைவா் அ. வேதரத்தினம் பேரணியை தொடங்கி வைத்தாா். ஐஎன்டியுசி பொருளாளா் தாயுமானவன், நிா்வாகி பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளா் தினேஷ் குண்டுராவ், முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேரணிக்குப் பிறகு, உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பையா பிள்ளையின் உருவச் சிலையை தினேஷ் குண்டுராவ் திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT