நாகப்பட்டினம்

திருமருகல் அருகே 4 சிலைகள் கண்டெடுப்பு

DIN

திருமருகல் ஒன்றியம், அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் 4 கற்சிலைகள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

இங்குள்ள சோழ அய்யனாா் கோயில் பின்புறம் கற்சிலைகள் கிடப்பதாக திட்டச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா், சுமாா் 50 ஆண்டுகள் பழைமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை மற்றும் தலா ஒரு அடியில் 2 அம்மன் சிலைகளை கைப்பற்றி, அகரக்கொந்தகை கிராம நிா்வாக அலுவலா் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.

இந்த சிலைகள் நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக.17) ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சிலைகள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT