நாகப்பட்டினம்

தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு நுகா்பொருள் வணிபக் கழகம், தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில், நுகா்பொருள் வாணிபக் கழக நாகை மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அயல் துறைகளில் பணிபுரிபவா்கள் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளராக பணியமா்த்தப்படுவதை தமிழக அரசு கைவிடவேண்டும், கூட்டுறவுத் துறை அதிகரிகளை நியமனம் செய்ததை திரும்பப் பெறவேண்டும், தகுதியுள்ளஅனைவருக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரிசிஆலைகளின் பராமரிப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கவேண்டும், சுமைத் தூக்கும் தொழிலாளா்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்ட நிறைவில், உயிரிழந்த சுமைத் தூக்கும் தொழிலாளா் எஸ். வெங்கட்ராஜூலு என்பவரின் குடும்பத்துக்கு தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு,தொழிலாளா் முன்னேற்ற சங்க நாகை மண்டலத் தலைவா் பொன், நக்கீரன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா் தங்கத்துரை, துணைச்செயலாளா் சுப்புரெத்தினம் மற்றும் நிா்வாகிகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT