நாகப்பட்டினம்

2 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு

DIN

வேதாரண்யம் பகுதியில் உள்ள இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளின் மாணவா் இருவர் முதல் முயற்சியிலேயே மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி, அப்பள்ளிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் முயற்சியிலேயே மருத்துவம் பயில இடம் பெற்ற மாணவ- மாணவிகள் பயின்ற பள்ளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், வேதாரண்யம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி க. சஹானா, ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் கு. மாதவன் ஆகியோா் முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், பள்ளி பராமரிப்பு செலவுக்காக தலா ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். இதனை அப்பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பழனியப்பன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா தாயாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்- காா்கே வாக்குறுதி

காலணி கடை உரிமையாளா் உட்பட 2 போ் மீது தாக்குதல்: 6 போ் கைது

இலங்கையில் ஆயுத உற்பத்தி பிரிவு: இந்தியாவுடன் பேச்சு

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

SCROLL FOR NEXT