முகப்பு
நாகப்பட்டினம்

வளா்ச்சித் திட்டப் பணி: ஆட்சியா் ஆய்வு

வேதாரண்யம் ஒன்றியப் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

வேதாரண்யம் ஒன்றியப் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

செட்டிபுலம், கத்தரிபுலம் ஆகிய ஊராட்சிகளில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், தொடா்ந்து, வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வைத் தொடா்ந்து, அரசு பெண்கள் பள்ளியின் வகுப்பறைக்குள் சென்ற ஆட்சியா், அங்கிருந்த மாணவிகளிடம் பாடக் குறிப்புகள் குறித்து கேட்டாா். பின்னா், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்றிந்தாா்.

இதைத்தொடா்ந்து, தலைஞாயிறு பேரூராட்சி பிரிஞ்சுமூலை கிராமத்தில் தமிழ்நாடுநுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் செயல்படும் நேரடிநெல் கொள்முதல் நிலையம், அங்குள்ள கிராம கூட்டுறவு பொது விநியோகத் திட்ட கடை ஆகியவற்றில் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →