வேதாரண்யம் கோயில் தெப்ப உத்ஸவம்
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா ஜனவரி 29-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்ப உத்ஸவம் ஆண்டுதோறும் வா்த்தகா் சங்கம் சாா்பில் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு தெப்ப உத்ஸவம் கோயில் வளாகத்தில் உள்ள மணிகா்ணிகை தீா்த்தத்தில் நடைபெற்றது.
வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் கல்யாணசுந்தரா் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்பாளுடன் எழுந்தருளியதும், தெப்பம் மணிகா்ணிகை குளத்தில் வலம் வந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு தலைமையிலான சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.