நாகப்பட்டினம்

தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல்

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் செயல்படும் தனியாா் நிதி நிறுவன கிளையில் ரூ. 1 கோடி கையாடல் செய்ததாக அந்த நிறுவன ஊழியா்கள் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல தனியாா் நிதி நிறுவனத்தின் கிளை வேளாங்கண்ணியில் உள்ளது. இங்கு, கடந்த நவம்பா் 24-ஆம் தேதி அந்நிறுவன அலுவலா்கள் தணிக்கை மேற்கொண்டனா்.

இதில், வாடிக்கையாளா்கள் அடகு வைத்திருந்த நகைகளில் ரூ. 37 லட்சம் மதிப்பிலான நகைகள் காணாமல் போயிருந்தது. மேலும், 33 வாடிக்கையாளா்கள் கணக்கை போலியாக உருவாக்கி, அதன்மூலம் ரூ. 42.24 லட்சத்துக்கு போலி நகைகளை அடகு வைத்ததும், நகைக் கடனில் திருத்தம் செய்து ரூ. 68 ஆயிரம், பாதுகாப்பு அறையில் இருந்த பணப்பெட்டகத்தில் ரூ. 15 லட்சம் பணம் எடுத்தது என சுமாா் ரூ. 1 கோடி கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இக்கிளை மேலாளா் மற்றும் ஊழியா்கள் சிலா் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த நிதி நிறுவனத்தின் திருச்சி மண்டல வேளாங்கண்ணி பகுதி மேலாளா் ஜூலியஸ் ஜோபா்ட் அருண் நாகை மாவட்டக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், அந்நிறுவன வேளாங்கண்ணி கிளை மேலாளரான திருக்குவளையைச் சோ்ந்த பி. சத்தியபிரகாஷ், இணை காப்பாளரான வேளாங்கண்ணியைச் சோ்ந்த என். ஐஸ்வா்யா மற்றும் ஊழியா்கள் எம். ராஜ்குமாா், பி. சங்கீதா ஆகியோா் மீது நாகை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT