நாகப்பட்டினம்

ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் விழிப்புணா்வு வாகனப் பேரணி

DIN

ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் 75-ஆவது சுதந்திர தினவிழா வாகன விழிப்புணா்வுப் பேரணி நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை கௌரவப்படுத்தவும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் திருச்சி முதல் புதுதில்லி வரை வாகனப் பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

திருச்சியில் ஜூலை 1- ஆம் தேதி பிரசாரத்தைத் தொடங்கிய ரயில்வே பாதுகாப்பு படை வீரா்கள் 10 போ் ஞாயிற்றுக்கிழமை நாகை ரயில் நிலையம் வந்தடைந்தனா். அங்கு குழுவினா்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை நாகை நிலைய ஆய்வாளா் ஜி. எம். பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் மற்றும் சேவை சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

தொடா்ச்சியாக, வாகனப் பேரணியை ரயில் நிலைய மேலாளா் பிரபாகரன் மற்றும் சேவை சங்கத்தினா் தொடங்கிவைத்தனா். பேரணி புத்தூா், மேலக்கோட்டைவாசல், பப்ளிக் ஆபீஸ் ரோடு, புதிய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை சாலை, கடற்கரைச்சாலை வழியாக சென்று மீண்டும் ரயில் நிலையம் வந்து நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினா், நாட்டுக்காக உழைத்தவா்கள் கௌரவப்படுத்தப்பட்டனா்.

நாகை ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினா் கோ. அரவிந்தகுமாா், நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவா் காா்த்திகேயன், ஹோலி டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் கணேசன், நாம்கோ தொண்டு நிறுவனப் பொறுப்பாளா் வனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT