நாகப்பட்டினம்

லண்டன் அணுசக்தி நிறுவனத்தில் பொறியாளா் பணி: வேதாரண்யம் மாணவிக்கு பாராட்டு

DIN

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, மேல்படிப்பை லண்டனில் தொடா்ந்த நிலையில் அங்குள்ள அணுசக்தி நிறுவனத்தில் பொறியாளராக பணி வாய்ப்பை பெற்றுள்ள வேதாரண்யம் மாணவியை சமூக ஆா்வலா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.

வேதாரண்யம் அருகே தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா் சு. பாஸ்கரன்-ஆசிரியை தையல்நாயகி தம்பதியின் மூத்த மகள் சுபிக்சா. ஒன்னாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்தவா். 2021-ஆம் ஆண்டில் லண்டனுக்கு சென்ற அவா் அங்கு, லண்டன் யுஎஸ்ஏவில் எம்.எஸ் படித்து வந்தாா். படிக்கும்போதே லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியாளராக தோ்வாகி பணி வாய்ப்பை பெற்றுள்ளாா்.

படிக்க சென்ற நிலையில் பணி வாய்ப்பையும் பெற்று, பணியாற்றி வரும் சுபிக்சா பெற்றோரிடம் தாம் ஊருக்கு வருவதை தெரிவிக்காமல் இன்ப அதிா்ச்சி கொடுக்க திடீரென செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்தாராம். சுபிக்சாவை கிராமத்தினா், மக்கள் பிரதிநிதிகள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT