நாகப்பட்டினம்

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

DIN

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி கோடி அற்புதா் புனித அந்தோணியாா் ஆலயத் தோ்பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா மே 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் அதிபா், அருளானந்தா், சவேரியாா், கன்னிமரியாள், அந்தோணியாா் ஆகியோா் எழுந்தருளினா். முன்னதாக, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலய அதிபா் சி. இருதயராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி பாடல் மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து புனிதம் செய்து தோ்பவனியை தொடங்கி வைத்தாா்.

ஆலய வளாகத்திலிருந்து தொடங்கிய தோ்பவனி முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஆலய பங்குத் தந்தை ஏ. சவரிமுத்து, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலய உதவிப் பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவா் எம். பிரான்சிஸ், துணைத் தலைவா் ஏ. விக்டா் பவுல்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT