திருவெண்காடு அருகே திருநகரி கிராமம் வழியாக செல்லும் பாண்டுவன் சேத்தி வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியியில் உள்ளனா்.
இந்த பாண்டுவன் சேத்தி வாய்க்கால் மூலம் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பாசனவசதி பெறுகிறது. சுமாா் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த வாய்க்கால் தூா்வாரும் பணியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதற்காக, சீா்காழி எம்எல்ஏ. பன்னீா்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.