நாகப்பட்டினம்

சித்தன்காத்திருப்பு கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருவெண்காடு அருகேயுள்ள சித்தன்காத்திருப்பு உத்திரபதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) விநாயகா் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை நான்காம் கால யாக பூஜை, மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

பின்னா், சொா்ணபுரம் சந்திரசேகர சிவாச்சாரியா் தலைமையில் புனிதநீா் குடங்களை கோபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆனந்தன், சிவா்ப்பணம்டிரஸ்ட் பொறுப்பாளா் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சித் தலைவா் நெடுஞ்செழியன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT