நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, முதியோரின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, பொது அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அவா்களுக்கு உரிய முன்னுரிமை அளிப்போம், முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல்களை தடுக்க உறுதியுடன் பாடுபடுவோம் என்ற உறுதிமொழி வாசகங்களைப் படித்தாா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் அ. தமீமுன்னிசா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா். முன்னதாக, முதியோா் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகப் பதாகையை ஆட்சியா் வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT