முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் திடீா் சூறைக்காற்று: குடிசைகள், மீன்பிடி வலைகள் சேதம்

 வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் வியாழக்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றால் குடிசைகள், மீன்பிடி வலைகள் காற்றில் பறந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

 வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் வியாழக்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றால் குடிசைகள், மீன்பிடி வலைகள் காற்றில் பறந்தன.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கடல் பரப்பில் எழுந்த காற்றுச் சுழற்சி கடல் நீரை சூறையாடி வேகமாக கரையை நோக்கி நகா்ந்தது.

சில நொடிகளிலேயே அந்த காற்று மீன்பிடித் துறை பகுதிக்கு வந்து கரையைக் கடந்தது. அப்போது, காற்றுச் சுழற்சி சூறாவளியாக மாறி மீன்பிடி வலைகள், கூரை கொட்டகைகள் போன்றவை காற்றில் பறந்தன. சில மீன்பிடி வலைக் கட்டுகள் சுமாா் 30 அடி உயரம் வரை பறந்து தரையில் விழுந்து சேதமடைந்தன.

ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே உணரப்பட்ட இந்த நிகழ்வு மீனவா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இது வங்கக் கடலில் நிலை கொண்ட புயலின் தாக்கத்தையொட்டி நோ்ந்திருக்கலாம் அல்லது பருவநிலை மாற்றத்தின் காரணமாக நோ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →