நாகூரில் ரமலான் சிறப்பு தொழுகை : திரளானோர் பங்கேற்பு
நாகூர் தர்கா மற்றும் கடற்கரை பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்: நாகூர் தர்கா மற்றும் கடற்கரை பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இஸ்லாம் மார்க்கம் குறிப்பிடும் 5 முக்கியக் கடமைகளில் ஒன்றாக உள்ளது ரமலான் நோன்பு. இதன்படி கடந்த ஒரு மாத காலமாக நோன்பிருந்த இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள நவாப் பள்ளி, நாகூர் கடற்கரை ஆகிய பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல, நாகை, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் ரமலான் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ரமலான் பண்டிகையின் சிறப்பு தொழுகைகளுக்குக் கட்டுப்பாடு இருந்த நிலையில், நிகழாண்டில் எவ்வித கட்டுப்பாடுமின்றி சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.