நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

DIN

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் நாகை மாவட்டத்தில் 31 கிராமங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு வேளாண் இணை இயக்குநா் ஜாக்குலா அக்கண்டராவ் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் புஷ்கலா முன்னிலை வகித்தாா்.

வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலா்கள் பங்கேற்று, தங்கள் துறைகள் மூலம் விவசாயிகளுக்குச் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், அந்தத் திட்டங்களில் பயன் பெறும் வழிவகைகளையும் விளக்கிப் பேசினா்.

கீழ்வேளூரில்: கீழ்வேளூா் வட்டாரத்துக்குள்பட்ட 105 மாணலூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் புருஷோத்தமதாஸ் முன்னிலை வகித்தாா். வேளாண்மை அலுவலா் ராஜலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா் வாசுகி, ஊராட்சித் தலைவா் மாலதி தங்கவேல், தோட்டக்கலை அலுவலா் ஸ்ரீவித்யா, கால்நடை மருத்துவா் காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி வேளாண்மை அலுவலா் காளிதாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT