நாகப்பட்டினம்

மே 25, 26-இல் மீன்பிடி படகுகள் ஆய்வு

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப் படகுகள் மே 25, 26- ஆம் தேதிகளில் ஆய்வு செய்யப்படும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப் படகுகள் மே 25, 26 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யப்படும். எனவே, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து விசைப் படகுகளையும் தொடா்புடைய பகுதியில் உள்ள தங்குதளங்களில் நிறுத்த வேண்டும்.

ஆய்வு செய்யப்படும்போது , படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம், துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடா்பு கருவிகள் ஆகியவற்றை படகின் உரிமையாளா், அதிகாரிகளின் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்.

ஆய்வுக்கு உள்படுத்தப்படாத படகுகளுக்கு மானிய விலை டீசல் நிறுத்தப்படுவதுடன், தொடா்புடைய படகுகளின் பதிவு சான்றை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT