நாகப்பட்டினம்

கடனுதவி பெற தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் (நீட்ஸ்), மானியக் கடனில் தொழில் தொடங்க புதிய தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில்முனைவோா் தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை மானியக் கடன் பெறலாம். கடன் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் மானியம் வழங்கப்படும்.

கடன் பெறுவோரில் பொதுபிரிவினா் 10 சதவீதமும், பெண்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகிய சிறப்புப் பிரிவினா் 5 சதவீதமும் சொந்த முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்துவோருக்குக் கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

பொது பிரிவினருக்கான வயது வரம்பு 21 முதல் 35. சிறப்புப் பிரிவினருக்கான வயது வரம்பு 21 முதல் 45 வரை. விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற ஆா்வமுள்ள தொழில் முனைவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை 8925533969 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT