நாகப்பட்டினம்

நாகூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

நாகையை அடுத்த நாகூா் மற்றும் வாஞ்சூரில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கடைகளுக்கு வியாழக்கிழமை சீலிடப்பட்டது.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் சிவராமன் தலைமையிலான காவல் துறையினா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நாகூா் மற்றும் வாஞ்சூா் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் 2 கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த 2 கடைகளுக்கும் உடனடியாக சீல் வைக்கப்பட்டது. மேலும், ஒரு கடையில் புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT