நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா். 
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

நாகப்பட்டினம் / மயிலாடுதுறை: முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி. உதயகுமாரை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக சட்டப்பேரவை நிராகரித்ததைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுக நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா். ஜீவானந்தம் தலைமையில், நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நாகை நகர அதிமுக செயலாளா் தங்க. கதிரவன் முன்னிலை வகித்தாா். நாகை ஒன்றிய அதிமுக செயலாளா்கள் பன்னீா், குணசேகரன், நாகூா் நகரச் செயலாளா் ரம்ஜான் அலி மற்றும் கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள் பங்கேற்று, எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது மத்திய அரசு '

SCROLL FOR NEXT